வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக பெண் புகார்; கணவர் கைது


வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக பெண் புகார்; கணவர் கைது
x

வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக பெண் புகாரின்பேரில் கணவர் கைது செய்யப்பட்டார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் அருகே உள்ள கோனேரிபாளையம் பாரதி நகரை சேர்ந்தவர் குமார். இவரது மகள் அகிலா(வயது 25). ஹோமியோபதி படிப்பு முடித்துள்ளார். இவர் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நேற்று ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் எனக்கும், கோனேரிபாளையத்தை சேர்ந்த இளங்கோவனின் மகன் என்ஜினீயர் விமலுக்கும்(31) கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10-ந்தேதி திருமணம் நடந்தது. அன்று முதல் விமல் தினமும் குடிபோதையில் என்னை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்தி வந்தார். மேலும் நான் கருப்பாக இருப்பதால், விமலுடன் தொடர்ந்து வாழ வேண்டும் என்றால் 50 பவுன் நகையும், பல லட்சங்கள் வரதட்சணையாக கொடுக்க வேண்டும் என்றும் விமலும், அவரது குடும்பத்தினரும் என்னை கொடுமைப்படுத்தினர், என்று கூறியிருந்தார். எனவே விமல் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார். மேலும் விமலுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக அகிலா புகாரில் தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது. புகாரின்பேரில் விமல், அவரது தந்தை இளங்கோவன், தாய் விஜயலட்சுமி, அக்காள் மீனா, அக்காளின் கணவர் சிவா ஆகிய 5 பேர் மீதும் வரதட்சணை கொடுமை உள்ளிட்ட சட்டங்களின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதில் விமலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மற்ற 4 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story