போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண் பரபரப்பு புகார்


போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண் பரபரப்பு புகார்
x
தினத்தந்தி 22 Nov 2022 7:30 PM GMT (Updated: 22 Nov 2022 7:31 PM GMT)

கணவர் 2-வது திருமணம் செய்ததாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

தர்மபுரி

தர்மபுரி மாவட்டம் மாட்லாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சத்யா. இவர், தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று ஒரு புகார் மனு அளித்தார். அதில், எனக்கு ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. அரசு துறையில் பணிபுரியும் என்னுடைய கணவர், என்னிடம் தகராறில் ஈடுபட்டார். பின்னர் என்னுடைய தங்கையை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று 2-வது திருமணம் செய்து கொண்டார். இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.


Next Story