பாகலூர் அருகேகுட்டையில் மூழ்கி பெண் சாவு


பாகலூர் அருகேகுட்டையில் மூழ்கி பெண் சாவு
x
தினத்தந்தி 30 April 2023 12:30 AM IST (Updated: 30 April 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் அருகே உள்ள கூஸ்தனப்பள்ளியை சேர்ந்தவர் நாராயணசாமி. இவருடைய மனைவி ரேணுகா (வயது 40). இவர் சம்பவத்தன்று அதே பகுதியில் ரமேஷ் ரெட்டி என்பவரது நிலத்தில் பசுமாட்டை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது அருகில் உள்ள குட்டையில் குளித்து கொண்டிருந்த உறவுக்கார சிறுமி சரிகா (9) திடீரென தண்ணீரில் மூழ்கினாள். இதை கண்டு அதிர்ச்சியடைந்த ரேணுகா தண்ணீரில் இறங்கி சிறுமியை காப்பாற்ற முயன்றார். ஆனால் எதிர்பாராதவிதமாக ரேணுனகா நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

1 More update

Next Story