அரசு பஸ் மோதி பெண் பலி


அரசு பஸ் மோதி பெண் பலி
x

அரசு பஸ் மோதி பெண் பலி

மதுரை

மேலூர்

மேலூர் அருகே திருவாதவூர் சமத்துவபுரத்தை சேர்ந்தவர் சின்னப்பொண்ணு(வயது 42). இவர் திருமண விழாவுக்கு சென்றுவிட்டு அவரது உறவினர் வீரணன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்துள்ளார். கீழையூர் அருகே வந்த போது அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. படுகாயமடைந்த இருவரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். ஆனால் சின்னப்பொண்ணு இறந்துபோனார். வீரணன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து கீழவளவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story