மினி பஸ் மோதி பெண் சாவு


மினி பஸ் மோதி பெண் சாவு
x
தினத்தந்தி 23 Oct 2023 2:45 AM IST (Updated: 23 Oct 2023 2:46 AM IST)
t-max-icont-min-icon

கம்பத்தில் மினிபஸ் மோதி பெண் பலியானார்.

தேனி

உத்தமபாளையம் பூந்தோட்ட தெருவை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 71). இவரது மனைவி கற்பகம் (58). இவர், நேற்று காலை கம்பம் சுருளிப்பட்டி சாலையில் உள்ள மாசாணி அம்மன் கோவிலுக்கு கம்பத்தில் இருந்து மினி பஸ்சில் சென்றார். அங்கு சாலையை கடக்க முயன்றபோது, அந்த மினி பஸ் அவர் மீது மோதியது. இதில் கற்பகம் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்த கம்பம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, பஸ் டிரைவர் கம்பம் நந்தனார் காலனியை சேர்ந்த ஜெயராமன் (42) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story