ஆவடி அருகே ரெயிலில் அடிபட்டு பெண் பலி


ஆவடி அருகே ரெயிலில் அடிபட்டு பெண் பலி
x
சென்னை

ஆவடி,

ஆவடியை அடுத்த அண்ணனூர் பொன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜோதி பாஸ். இவருடைய மனைவி ரம்யா (வயது 37). இவர்களுக்கு துவாரகேஸ் (13) என்ற மகனும், தனன்யா (10) என்ற மகளும் உள்ளனர்.

நேற்று முன்தினம் மாலை இவர்களது மகளுக்கு வீட்டில் பிறந்த நாள் கொண்டாடினர். பின்னர் தோழியை பார்த்து விட்டு வருவதாக கூறிச்சென்ற ரம்யா, அதன்பிறகு மாயமானார். அவரது தோழி வீட்டுக்கும் செல்லவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் ரம்யாவை காணவில்லை.

இந்தநிலையில் ஆவடி-அண்ணனூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளம் அருகே மின்சார ரெயிலில் அடிபட்டு ரம்யா பிணமாக கிடந்தார். ஆவடி ரெயில்வே போலீசார் ரம்யா உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரம்யா தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றபோது ரெயிலில் அடிபட்டு உயிரிழந்தாரா? அல்லது ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? என விசாரித்து வருகின்றனர்.


Next Story