மோட்டார்சைக்கிள் மீது கார் மோதி பெண் பலி


மோட்டார்சைக்கிள் மீது கார் மோதி பெண் பலி
x

தூசி அருகே மோட்டார்சைக்கிள் மீது கார் மோதி பெண் பலியானார்.

திருவண்ணாமலை

தூசி

தூசி அருகே மோட்டார்சைக்கிள் மீது கார் மோதி பெண் பலியானார்.

வெம்பாக்கம் தாலுகா அப்துல்லாபுரம் கிராமம் கே.கே.நகரைச் சேர்ந்தவர் நாராயணன். இவரது மகள் சுமிக்ஷா (வயது 19). இவரது நண்பர் காஞ்சீபுரம் செட்டிகுளம் பகுதியை சேர்ந்தவர் கிஷோர்குமார் (20).

இருவரும் திருவண்ணாமலையில் பவுர்ணமியையொட்டி நேற்று முன்தினம் இரவு கிரிவலம் சென்றுவிட்டு ேமாட்டார்சைக்கிளில் திரும்பிக்கொண்டிருந்தனர்.

வந்தவாசி - காஞ்சீபுரம் சாலையில் கல்லேரி கிராமம் அருகே அதிகாலையில் வந்தபோது பின்னால் வந்த கார் இவர்களது மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் காயம் அடைந்த இருவரையும் அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இளம்பெண் சுமிக்ஷா இறந்து விட்டார். கிஷோர்குமார் தொடர் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்து இறந்த பெண்ணின் தாயார் கலைச்செல்வி தூசி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

1 More update

Next Story