மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பலி


மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பலி
x
தினத்தந்தி 3 July 2023 1:15 AM IST (Updated: 3 July 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பலி

கோயம்புத்தூர்

நெகமம்

நெகமத்தை அடுத்த சுந்தரகவுண்டனூரை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 60). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி வள்ளியம்மாள்(45). இவர்களது உறவினர் சரஸ்வதி(45). இவர்கள் 3 பேரும், சுந்தரகவுண்டனூரில் இருந்து பொள்ளாச்சி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றனர். மோட்டார் சைக்கிளை ராஜேந்திரன் ஓட்டினார்.

மரம்பிடுங்கிகவுண்டனூர் அருகே சென்றபோது, திடீரென சாலையின் குறுக்கே ஒரு நபர் வந்ததாக தெரிகிறது. அவர் மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் வள்ளியம்மாள், சரஸ்வதி ஆகியோர் மோட்டார் சைக்கிளில் இருந்து சாலையில் தவறி விழுந்து படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே வள்ளியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். சரஸ்வதிக்கு, பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story