மழைநீர் வடிகால் பணிக்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்த பெண்: பரபரப்பு காட்சிகள்
சென்னையில் மழைநீர் வடிகால் பணிக்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் பெண் ஒருவர் தவறி விழுந்தார்.
சென்னை,
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் கனமழை கொட்டிதீர்த்தது. இதன் காரணமாக முடிச்சூரில் மழைநீர் வடிகாலுக்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் தண்ணீர் நிரம்பி கிடந்தது.
தன் வீட்டில் இருந்து வெளியே வந்த இளம்பெண் அந்த பள்ளத்தில் தடுமாறி விழுந்து எழுந்தார். பள்ளம் இருப்பதே தெரியாத அளவுக்கு மழைநீர் தேங்கியதால், அவ்வழியாக சென்ற பாதசாரிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.
இதையடுத்து அப்பகுதி மக்கள், பள்ளம் இருப்பதை உணர்த்தும் வகையில் கற்களை வரிசையாக வைத்திருந்தனர். மழைநீர் வடிகாலுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களை அடையாளப்படுத்த, அப்பகுதியில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என முடிச்சூர் மக்கள் வலியுறுத்தினர்.
Related Tags :
Next Story