பூதப்பாண்டி அருகே கடன் தொல்லையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை


பூதப்பாண்டி அருகே கடன் தொல்லையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x

பூதப்பாண்டி அருகே கடன் தொல்லையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி

அழகியபாண்டிபபுரம்:

பூதப்பாண்டி அருகே கடன் தொல்லையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தொழிலாளி மனைவி

பூதப்பாண்டி அருகே அழகியபாண்டியபுரம் குறத்தியறை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன், தொழிலாளி. இவருடைய மனைவி புனிதா (வயது45). இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்தநிலையில் கணவர்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக மணிகண்டனை பிரிந்து புனிதா மகள்களுடன் தனியாக வசித்து வந்தார்.

தற்கொலை

இதற்கிடையே மூத்த மகளுக்கு திருமணம் செய்து வைக்க புனிதா பலரிடம் கடன் வாங்கினர். பின்னர் அந்த கடனை திருப்பி கொடுக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார். மேலும், கடன் கொடுத்தவர்களும் பணத்தை திருப்பி கேட்டு தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், கடந்த சில நாட்களாக புனிதா மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் மாடியில் தூங்க சென்ற புனிதா காலையில் நீண்டநேரமாகியும் எழுந்து வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த 2-வது மகள் அறையின் ஜன்னலை திறந்து பார்த்தார். அப்போது, புனிதா தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியில் கதறி அழுதார்.

பின்னர், இதுபற்றி பூதப்பாண்டி போலீசாருக்க தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்த புனிதாவின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story