ராமேசுவரம் கோவிலில் கூட்ட நெரிசலில் கீழே விழுந்த பெண் காயம்


ராமேசுவரம் கோவிலில் கூட்ட நெரிசலில் கீழே விழுந்த பெண் காயம்
x

ராமேசுவரம் கோவிலில் கூட்ட நெரிசலில் கீழே விழுந்த பெண் காயம்

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

மத்திய பிரதேசத்தை சேர்ந்த கமர்சிங், அவரது மனைவி கமலா பாய் (வயது 60) ஆகியோர் குடும்பத்துடன் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு வந்தனர். கோவிலுக்கு வந்த இவர்கள் கங்கை தீர்த்தம் கொண்டு வந்து அபிஷேகம் செய்வதற்காக வரிசையில் நின்று சன்னதிக்கு சென்றனர். அப்போது அதிகமான பக்தர்கள் கூட்டம் இருந்ததாகவும் அங்கு ஏற்பட்ட நெரிசலில் கமலா பாய் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. உடனடியாக அவரை ராமேசுவரம் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். ஆனால் கோவில் பணியாளர் தள்ளிவிட்டதால்தான் கீழே விழுந்ததாக அவர் கூறியதாக தெரியவருகிறது. இதுகுறித்து கோவில் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story