கார் மோதி பெண் பலி


கார் மோதி பெண் பலி
x
தினத்தந்தி 5 March 2023 6:45 PM GMT (Updated: 6 March 2023 11:20 AM GMT)

தியாகதுருகம் அருகே கார் மோதிய விபத்தில் பெண் பரிதாபமாக இறந்தார்.

கள்ளக்குறிச்சி

தியாகதுருகம் அருகே ராமநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சீவி. இவரது மனைவி நீலாம்பாள் (வயது 65) கூலி வேலை செய்து வந்தார். இவர் நேற்று காலை ராமநாதபுரம் பேருந்து நிறுத்தம் அருகில் சாலையை கடக்க முயன்றார். அப்போது கள்ளக்குறிச்சியில் இருந்து கூத்துக்குடி நோக்கி சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த கிருஷ்ணா என்பவர் ஓட்டி வந்த கார் எதிர்பாராதவிதமாக நீலாம்பாள் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story