பெண்ணிடம் 9 பவுன் நகை பறிப்பு


பெண்ணிடம் 9 பவுன் நகை பறிப்பு
x

பெண்ணிடம் 9 பவுன் நகையை பறித்து சென்றனர்.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி பஸ் நிலையம் அருகில் உள்ள தெய்வானை நகரை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி ரேணுகாதேவி. இவர் தனது குழந்தைகளுடன் சம்பவத்தன்று இரவு இருசக்கர வாகனத்தில் பஸ் நிலையம் அருகில் வந்து கொண்டிருந்தார். அப்போது இவரது இருசக்கர வாகனத்தை பின்தொடர்ந்து வந்த மர்மநபர் ஒருவர் ரேணுகா தேவி கழுத்தில் அணிந்து இருந்த 9 பவுன் நகையை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டார். அவரை துரத்தி பிடிக்க சென்ற ரேணுகாதேவி இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்ததில் காயம் அடைந்தார். இதுகுறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியிலேயே பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் நகையை வாலிபர் ஒருவர் பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிய சம்பவம் சிவகாசி போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு தனஞ்செயன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு பஸ் நிலையத்தில் இருந்து சாத்தூர் ரோடு, விருதுநகர் ரோடு பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விரைவில் அந்த நபரை பிடித்து விடுவோம் என போலீசார் கூறினர்.


Next Story