சாராயம் விற்ற பெண் கைது


சாராயம் விற்ற பெண் கைது
x
தினத்தந்தி 22 Aug 2023 12:15 AM IST (Updated: 22 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிக்கலில் சாராயம் விற்ற பெண் கைது

நாகப்பட்டினம்

சிக்கல்:

நாகை மாவட்டத்தில் சாராய கடத்தல் மற்றும் கஞ்சா விற்பனையை தடுக்கும் பொருட்டு, போலீசார் தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சிக்கல் ஊராட்சியில் கீழ்வேளூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிக்கல் ரெயில்வே கேட் அருகே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தியதில். விசாரணையில் அவர் நாகை செல்லூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த நல்லபிள்ளை மனைவி போதுமணி (வயது 55) என்பதும், அவர் அந்த பகுதியில் சாராயம் விற்றதும் தெரியவந்தது. தொடர்ந்து இது குறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து போதுமணியை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.


Next Story