தூக்குப்போட்டு பெண் தற்கொலை
ஆடுதுறை அருகே திருமணமான 4 ஆண்டுகளில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
திருவிடைமருதூர்;
ஆடுதுறை அருகே திருமணமான 4 ஆண்டுகளில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
திருமணம்
கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை நடராஜபுரம் அக்ரகாரம் தெற்கு வீதி பகுதியை சோ்ந்தவர் ராஜகுரு. இவருடைய மனைவி இந்துமதி(வயது24). இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது.9 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இந்துமதி தனது கணவாிடம் கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
தூக்குப்போட்டு தற்கொலை
இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராஜகுரு தனது மனைவியை சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்து வந்தார். நேற்று மதியம் வீட்டில் தனி அறையில் இந்துமதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த திருவிடைமருதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இந்துமதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருவிடைமருதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்துமதிக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் கும்பகோணம் உதவி கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.