விஷம் தின்று பெண் தற்கொலை


விஷம் தின்று பெண் தற்கொலை
x

தஞ்சையில் விஷம் தின்று பெண் தற்கொலை செய்து கொண்டார்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தஞ்சையில் விஷம் தின்று பெண் தற்கொலை செய்து கொண்டார்.

விஷம் தின்றார்

தஞ்சை மாவட்டம் திருவையாறு தாலுகா அந்தனகுறிச்சி பகுதியை சேர்ந்தவா் அருள்மொழி. பால்வியாபாரி. இவருடைய மனைவி மகாலட்சுமி (வயது 26). இவர்களுக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகள் ஆகிறது. கடந்த சில மாதங்களாக மகாலட்சுமி உடல்நிலைசரியில்லாமல் அவதியடைந்து வந்தார். இதனால் தஞ்சையை அடுத்துள்ள ரெட்டிப்பாளையம் சாலை அன்னை சிவகாமி நகரில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் தங்கியிருந்தார்.இந்த நிலையில் இவர் வீட்டில் விஷம் தின்று மயங்கி கிடந்தார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை குடும்பத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மகாலட்சுமிக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகளே ஆவதால் தஞ்சை உதவி கலெக்டர் ரஞ்சித் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

மற்றொரு சம்பவம்

தஞ்சை புதுக்கோட்டை சாலை நாடிமுத்து நகரை சேர்ந்தவர் இளையராஜா. இவரது மனைவி ஜெனிபர் (28). சம்பவத்தன்று இவர், விஷம் தின்று உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

1 More update

Next Story