மெட்ரோ ரயில் கதவு இடுக்கில் குழந்தையுடன் சிக்கிய பெண் - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்
சென்னை புது வன்னாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில், ரயிலின் கதவுகள் சரியாக இயங்காததை கண்டித்து பொதுமக்கள் தர்னாவில் ஈடுபட்டனர்.
சென்னை,
சென்னை புது வன்னாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில், ரயிலின் கதவுகள் சரியாக இயங்காததை கண்டித்து பொதுமக்கள் தர்னாவில் ஈடுபட்டனர்.
உயர்நீதிமன்ற நிறுத்தத்தில் பெண் ஒருவர் ரயிலில் ஏறியபோது, தானியங்கி கதவுகள் மூடியதால், தன் குழந்தையோடு கதவுகளுக்கு இடையே மாட்டிக்கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் இருவர் கதவுகளுக்கு நடுவே மாட்டிக்கொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மெட்ரோ ரயில் ஓட்டுநரிடம் பொதுமக்கள் தெரிவித்தபோது, அவர் இதனை பெரிதாக கண்டுகொள்ளவில்லை என தெரிகிறது. இதை கண்டித்த பொதுமக்கள், புது வன்னாரப்பேட்டையில் உள்ள ரயில் நிலையத்தில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story