காவல்நிலையத்தை முற்றுகையிட்ட பெண்கள் - காஞ்சிபுரத்தில் பரபரப்பு
காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூரில் காவல் நிலையத்தை பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூரில் காவல் நிலையத்தை பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்ரீபெரும்புதூர் போலீசார் நேற்று இரவு போந்தூர் பகுதியிலிருந்து குற்ற சரித்திர பதிவேடு மற்றும் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வரும் 10-க்கும் மேற்பட்டவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதனால் அவர்களின் உறவினர்கள் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் போலீசார் விசாரணை செய்து வரும் இளைஞர்களை விடுவிக்கக் கோரி வலியுறுத்தினர். அவர்கள் மீது வழக்கு போடுவதாக இருந்தால் தங்கள் மீதும் வழக்கு போட வேண்டும் என கூச்சலிட்டு அவர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story