டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பெண்கள் போராட்டம்
செஞ்சி அருகே டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்
செஞ்சி
செஞ்சியை அடுத்த பாலப்பாடி கிராமத்தில் களத்தம்பட்டு செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை உள்ளது. அதன் அருகிலேயே முருகர் கோவில் மற்றும் ஆரம்ப பள்ளி ஆகியவை உள்ளன. இந்த நிலையில் டாஸ்மாக் கடையில் மதுகுடித்துவிட்டு வருபவர்கள் போதை தலைக்கேறியதும் அந்த வழியாக செல்லும் மாணவிகள் மற்றும் பெண்களிடம் தகராறில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பெண்கள், மாணவிகள் பெரும் அச்சம் அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் டாஸ்மாக் கடை முன்பு அப்பகுதியை சேர்ந்த பெண்கள் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் அந்த டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை ஊர் முக்கியஸ்தர்கள் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story