மாவட்டத்தில் 2 ஆண்டுகளில்1,203 புதிய மகளிர் சுய உதவி குழுக்கள் அமைப்பு


மாவட்டத்தில் 2 ஆண்டுகளில்1,203 புதிய மகளிர் சுய உதவி குழுக்கள் அமைப்பு
x

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 1,203 புதிய மகளிர் சுய உதவி குழுக்கள் அமைக்கப்பட்டு இருப்பதாக கலெக்டர் ஸ்ரேயாசிங் தெரிவித்து உள்ளார்.

நாமக்கல்

புதிய மகளிர் சுயஉதவிக்குழுக்கள்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் பெண்களின் வாழ்க்கை தரம் உயரவும், பொருளாதார ரீதியில் பெண்கள் முன்னேறவும் மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு பல்வேறு கடன் உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு, கடந்த 14.12.2021 அன்று தமிழ்நாடு முழுவதும் 58,463 மகளிர் சுயஉதவிக்குழுக்களை சேர்ந்த 7,56,142 உறுப்பினர்களுக்கு ரூ.2749.85 கோடி மதிப்பிலான கடன் உதவிகளை வழங்கி தொடங்கி வைத்தார்.

அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் 2021-2022-ம் ஆண்டு மற்றும் 2022-– 2023-ம் ஆண்டில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 1,203 புதிய மகளிர் சுய உதவி குழு அமைக்கப்பட்டு உள்ளது. சுழல்நிதி கடனாக 575 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் வீதம் ரூ.86.25 லட்சம் கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. சமுதாய முதலீட்டு நிதியாக 936 குழுக்களுக்கு ரூ.1 கோடியே 8 லட்சம் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

வங்கிகடன் இணைப்பு நிதி

நலிவுற்ற தன்மை குறைப்பு நிதியின் கீழ் 172 நபர்களுக்கு ரூ.43 லட்சம் கடனுதவிகள் வழங்கப்பட்டு உள்ளது. வங்கிக்கடன் இணைப்பு நிதியாக 19,832 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1,157.82 கோடி வங்கி கடன் பெற்று தரப்பட்டு உள்ளது.

மேலும் இம்மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் மூலம் புதிதாக நகர்புற பகுதிகளில் 1,315 மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களை ஊக்குவிக்கும் வகையில் மகளிர் குழு உறுப்பினர்கள் சுய தொழில் தொடங்க ஏதுவாக கடன் உதவிகள் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.


Next Story