டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பெண்கள் முற்றுகை போராட்டம்


டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பெண்கள் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 11 Sep 2023 6:45 PM GMT (Updated: 11 Sep 2023 6:46 PM GMT)

வேதாரண்யம் அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பெண்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யம் அருகே சாலக்கடையில் டாஸ்மாக்கடையை அகற்றக்கோரி கடந்த 10 நாட்களாக கடையடைப்பு, டாஸ்மாக் கடையை திறக்க விடாமல் முற்றுகை, சாலை மறியல் என பல்வேறு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்களுக்கு பிறகு நேற்று கடையை திறக்க ஏற்பாடு செய்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக்கடை பொதுமக்களுக்கும் மாணவ-மாணவிகளுக்கும், வர்த்தகர்களுக்கும் இடையூறாக இருப்பதாக கூறி 100-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது என முற்றுகையிட முயன்றனர். இதையடுத்து சம்பவ இடத்தில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அதில் வரும் 3 நாட்கள் வரை கடை திறக்கப்பட மாட்டாது. அதற்குள் நாகையில் உதவி கலெக்டர் தலைமையில் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என கூறியதையடுத்து பொது மக்கள் கலைந்து சென்றனர்.


Next Story