கணவரை விட்டு பிரிந்து கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்திய இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் ஒரு ஆண் நண்பருடன் பேசியதை கள்ளக்காதலன் கண்டித்ததால் இந்த விபரீத முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

x

திருப்பூர்

அனுப்பர்பாளையம்

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

இளம் பெண்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியைச் சேர்ந்தவர் வசந்தாமணி (வயது 23). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. சுரேஷ் வசந்தாமணியை விட அதிக வயது கொண்டவராக இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சுரேஷ் தனது மனைவி வசந்தாமணியை அழைத்துக் கொண்டு திருப்பூருக்கு வந்துள்ளார். அப்போது வசந்தாமணி வேலைக்கு சென்றபோது புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கணேசன் (33) என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது.

இந்த நிலையில் வசந்தாமணியை அழைத்துக்கொண்டு சுரேஷ் மீண்டும் திருவண்ணாமலைக்கு சென்று விட்டார். ஆனால் வசந்தாமணி அங்கிருந்தவாறு கணேசனுடனான கள்ளக்காதலை கைவிடாமல் தொடர்ந்துள்ளார். கள்ளக்காதலர்கள் இருவரும் செல்போன் மூலமாக பேசி தங்களது உறவை உறுதிப் படுத்தி வந்தனர். இதற்கிடையில் வசந்தாமணி, கடந்த 7 மாதங்களுக்கு முன்புகணவரை பிரிந்து திருவண்ணாமலையில் இருந்து திருப்பூருக்கு வந்துள்ளார்.

மேலும் ஒருவருடன் நட்பு

பின்னர் திருப்பூர்சிறுபூலுவப்பட்டியை அடுத்த காவேரிநகரில் வசந்தாமணியும், கணேசனும் வாடகை வீடு எடுத்து கணவன்- மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில் வசந்தாமணி மற்றொரு ஆண் நண்பருடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணேசன் வசந்தாமணியை கடுமையாக கண்டித்து, எச்சரித்துள்ளார். வசந்தாமணியும் தான் செய்தது தவறு என்று கணேசனிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இந்த நிலையில் இதே பிரச்சினை தொடர்பாக நேற்று முன்தினம் இரவு வசந்தாமணிக்கும், கணேசனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, வாக்குவாதமாக மாறி உள்ளது. இதில் எரிச்சலடைந்த கணேசன் வசந்தாமணியை அடித்ததாக கூறப்படுகிறது. இதன் பின்பு அவர் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார்.

தற்கொலை

சிறிது நேரம் கழித்து வீடு திரும்பிய கணேசன் வீடு உள்புறமாக பூட்டப்பட்டிருந்ததால் வசந்தாமணியை வெளியில் இருந்து அழைத்துள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் கதவை திறக்காததால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வசந்தாமணி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதுகுறித்து 15 வேலம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வசந்தாமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கணேசனிடம் நடத்திய விசாரணையில் வசந்தாமணி செல்போனில் அடிக்கடி பேசியதால் ஏற்பட்ட தகராறு காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

ஆனாலும் வசந்தாமணி தற்கொலை செய்து கொண்டாரா? என்பது பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து 15 வேலம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து கள்ளக்காதலன் கணேசனை கைது செய்தனர். திருப்பூரில் கணவரை பிரிந்து கள்ளக்காதலனுடன் வசித்து வந்த இளம்பெண் மற்றொரு ஆண் நண்பருடன் பேசியதால் ஏற்பட்ட தகராறில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story