மாரியம்மன் கோவிலில் மாவிளக்கு எடுத்து பெண்கள் வழிபாடு


மாரியம்மன் கோவிலில் மாவிளக்கு எடுத்து பெண்கள் வழிபாடு
x
தினத்தந்தி 9 Oct 2022 12:15 AM IST (Updated: 9 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மாரியம்மன் கோவிலில் மாவிளக்கு எடுத்து பெண்கள் வழிபாடு நடத்தினர்.

தென்காசி

சிவகிரி:

சிவகிரி அருகே தேவிபட்டணம் நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா நடைபெற்றது. இதையொட்டி ஒவ்வொரு நாளும் மாரியம்மன், சிவசக்தி அம்மன், பத்திரகாளி அம்மன், ஆதிபராசக்தி அம்மன், மகாலட்சுமி அம்மன், மீனாட்சி அம்மன், பத்மாவதி அம்மன், துர்க்கை அம்மன், சரஸ்வதி அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. 10-ம் நாளன்று மாரியம்மன் காமாட்சியம்மன் அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டது.

தொடர்ந்து பெண்கள் கையில் மாவிளக்கு தீபத்துடன் ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக வந்து கோவிலை அடைந்தது. தொடர்ந்து மாரியம்மன் கொடை சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வருதல் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


1 More update

Next Story