மகளிர் உரிமைத்தொகை திட்டம் : கூடுதல் பணியாளர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவு


மகளிர் உரிமைத்தொகை திட்டம் : கூடுதல் பணியாளர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவு
x

மேல்முறையீட்டு மனு மீது நடவடிக்கை எடுக்கவும், திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தவும் கூடுதல் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை,

மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்திற்காக விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களின் வங்கிக்கணக்கிற்கு மாதந்தோறும் 15-ம் தேதி 1,000 ரூபாயை தமிழக அரசு செலுத்தி வருகிறது.

இந்த திட்டத்தில் விண்ணப்பித்து மனு நிராகரிக்கப்பட்ட 11 லட்சத்து 85 ஆயிரம் பேர் தங்களுக்கும் ரூ.1000 பணம் வழங்க வேண்டும் என்று கேட்டு மேல்முறையீடு செய்திருந்தனர். இதில் தகுதியான மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில், கூடுதலாக 8 தாசில்தார், 101 துணை தாசில்தார் பணியிடங்களை உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. மேல்முறையீட்டு மனு மீது நடவடிக்கை எடுக்கவும், திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தவும் கூடுதல் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


Next Story