ஆட்சிக்கு வந்த மாதத்தில் இருந்து கணக்கிட்டு மகளிர் உரிமைத்தொகை வழங்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தல்


ஆட்சிக்கு வந்த மாதத்தில் இருந்து கணக்கிட்டு மகளிர் உரிமைத்தொகை வழங்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 16 July 2023 2:43 PM IST (Updated: 16 July 2023 3:32 PM IST)
t-max-icont-min-icon

ஆட்சிக்கு வந்த மாதத்தில் இருந்து கணக்கிட்டு மகளிர் உரிமைத்தொகை வழங்க வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை

சென்னை,

சென்னை ஜிம்கானா கிளப் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

7 அடி திருவள்ளுவர் சிலை பிரான்சில் நிறுவப்பட இருக்கிறது. பிரான்சில் திருவள்ளுவர் சிலை அமைக்கிறோம் என்று பிரதமர் சொல்கிறார். ஆனால் இங்கு தமிழுக்காகத்தான் வாழ்கிறோம் என்று சொல்லுகின்ற ஒரு அரசியல்வாதி கூட பிரதமருக்கு பாராட்டு தெரிவிக்கவில்லை. அப்படியென்றால் தமிழை இவர்கள் அரசியலுக்கும், ஆதாயத்துக்காகவும்தான் பயன்படுத்துகிறார்களா? ரூ.15 லட்சம் கொடுப்பேன் என்று சொல்லவில்லை. கருப்பு பணத்தை மீட்டால், ஒவ்வொரு குடும்பமும் ரூ.15 லட்சம் பெறுகின்ற அளவுக்கு வளர்ச்சியை கொண்டுவர முடியும் என்றுதான் பிரதமர் கூறினார். அந்த வளர்ச்சியை நாடு இப்போது அடைந்திருக்கிறது. வந்தே பாரத் ரெயில் கொண்டுவரப்பட்டுள்ளது. ரூ.1,000 கொடுப்பதாக கூறித்தான் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. மகளிருக்கான உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் ஆட்சிக்கு வந்தநாள் முதல் கணக்கிட்டு சேர்த்து வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story