பெண்கள் பால்குட ஊர்வலம்


பெண்கள் பால்குட ஊர்வலம்
x
தினத்தந்தி 23 July 2023 6:45 PM GMT (Updated: 23 July 2023 6:45 PM GMT)

சிறுபாக்கம் அருகே பெண்கள் பால்குட ஊர்வலம்

கடலூர்

சிறுபாக்கம்

சிறுபாக்கம் அருகே உள்ள மாங்குளம் ஊராட்சியில் பிரசித்தி பெற்ற ஶ்ரீ மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆடிப்பூர விழாவையொட்டி நேற்று அதிகாலையில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பின்னர் மேளதாளம் இசைக்க செவ்வாடை அணிந்த பெண் பக்தர்களின் பால்குட ஊர்வலம் நடைபெற்றது. கோவில் முன்பு இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து அம்மனுக்கு பால், பன்னீர், தயிர், தேன், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இதையடுத்து மாலையில் கிராம மக்கள் வனப்பகுதியில் உள்ள காட்டு மாரியம்மன் கோவிலுக்கு சென்று ஊரணி பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். இதில் மாங்குளம் கிராம மக்கள் திரளாக கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.


Next Story