வீட்டுமனை பட்டா கேட்டு தாசில்தாரிடம் பெண்கள் மனு
வீட்டுமனை பட்டா கேட்டு தாசில்தாரிடம் பெண்கள் மனு அளித்தனர்.
புதுக்கோட்டை
ஆலங்குடி தாலுகா திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மழவராயன்பட்டி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் ஆலங்குடி தாசில்தார் விஸ்வநாதனிடம் 10-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட பெண்கள் வீட்டுமனை பட்டா கேட்டு நேற்று மனு அளித்தனர். இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட தாசில்தார் இதுகுறித்து பரிசீலனை செய்வதாகவும், அறந்தாங்கி ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தாருக்கு பரிந்துரை செய்வதாகவும் தெரிவித்தார். மேலும் சம்பந்தப்பட்ட இடங்களை ஆய்வு செய்து உடனடியாக பட்டா வழங்க ஏற்பாடு செய்வதாகவும் உறுதி அளித்தார்.
Related Tags :
Next Story