காலிக்குடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகை


காலிக்குடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகை
x

முத்துப்பேட்டையில், குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.

திருவாரூர்

முத்துப்பேட்டை,

முத்துப்பேட்டையில், குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.

காலிக்குடங்களுடன் முற்றுகை

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட கொய்யாதோப்பு பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறி அப்பகுதி பெண்கள் காலிக்குடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு வந்த பேரூராட்சி தலைவர் மும்தாஜ் நவாஸ்கான், துணைத்தலைவர் ஆறுமுக சிவக்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பேரூராட்சியில் இருந்த அலுவலரிடம் தங்களது கோரிக்கை மனுவை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியதாவது:-

குடிநீர் தட்டுப்பாடு

முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட கொய்யா தோப்பு பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனா். இப்பகுதியில் குடிநீர் இல்லாமல் பெண்கள் பல கிலோமீட்டர் தூரம் நடந்து தண்டவாளத்தை கடந்து சென்று குடத்தை சுமந்து தண்ணீர் எடுத்து வருகின்றனர். இது குறித்து பலமுறை பேரூராட்சி அலுவலகத்தில் முறையிட்டும் பல மனுக்கள் கொடுத்தும் பயனில்லை. எனவே தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.மனுவை பெற்றுக்கொண்ட அலுவலர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதைத்தொடா்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story