மகளிர் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு முகாம்
மகளிர் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு முகாம்
பந்தலூர்
பந்தலூர் அருகே சேரம்பாடி சமுதாய கூடத்தில் மகளிர் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். கூடலூர் சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் லீலா கலந்துகொண்டு பேசும்போது, மகளிர் நலனை அதிகம் பாதிப்பது ஊட்டச்சத்து குறைபாடு. இதை தவிர்க்க கீரை வகைகள், காய்கறிகள், பழங்களை அதிகம் எடுத்து கொள்ள வேண்டும். ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படுகிறது. அதை பயன்படுத்தி கொள்ள வேண்டும். மேலும் அயோடின் பற்றாக்குறையால் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். எனவே ரேஷன் கடையில் வழங்கும் அயோடின் கலந்த உப்பை வாங்கி பயன்படுத்த வேண்டும் என்றார்.
பின்னர் மகளிர் உதவி மைய பொறுப்பாளர்கள் வளர்மதி, தீப்தி ஆகியோர் மகளிர் பாதுகாப்பு மையங்கள் குறித்து பேசினர். இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன், அஜீத், உறுப்பினர் பார்வதி, சேரங்கோடு ஊராட்சி அளவிலான மகளிர் கூட்டமைப்பு நிர்வாகிகள், மகளிர் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.