மரம் அறுவை மில் உரிமையாளர் பலி
கன்னங்குறிச்சி:-
மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் மரம் அறுவை மில் உரிமையாளர் பலியானார்.
மரம் அறுவை மில்
ஏற்காடு அடிவாரம் கொண்டப்பநாயக்கன்பட்டி புதிய காந்திநகரைச் சேர்ந்தவர் பழனிசாமி (வயது 58). மரம் அறுவை மில் நடத்தி வந்தார். இவர், ஆடி அமாவாசை அன்று மேச்சேரியில் கோவிலுக்கு சென்று விட்டு செட்டிச்சாவடி வழியாக மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளும், இவர் சென்ற மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன. இதில் படுகாயம் அடைந்த பழனிச்சாமி சம்பவ இடத்திலேயே பலியானார்.
போலீசார் விசாரணை
விபத்து குறித்து கன்னங்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப்-இன்ஸ்பெக்டர் மோனிகா ஆகியோர் விசாரணை நடத்தினர்.
பலியான பழனிச்சாமி உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. எதிரே வந்த மோட்டார் சைக்கிளை போலீசார் மீட்டு, அதனை ஓட்டி வந்தவர் குறித்து விசாரணை நடத்தினர்.