சிகரமாகனப்பள்ளி ஊராட்சியில்செல்போன் கோபுரம் அமைக்கும் பணி தொடக்கம்


சிகரமாகனப்பள்ளி ஊராட்சியில்செல்போன் கோபுரம் அமைக்கும் பணி தொடக்கம்
x
தினத்தந்தி 27 July 2023 7:30 PM GMT (Updated: 27 July 2023 7:30 PM GMT)
கிருஷ்ணகிரி

வேப்பனப்பள்ளி:

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியம் சிகரமாகனப்பள்ளி ஊராட்சியில் தோட்டகணவாய், மேட்டுப்பாளையம், கே.கொத்தூர், பூதிமுட்லு, சிகரமானப்பள்ளி மற்றும் கொங்கனப்பள்ளி கிராமங்கள் உள்ளன. இங்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் அனைத்து கிராமங்களும் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளன. இந்த கிராமங்களில் சரிவர செல்போன் சிக்னல் கிடைப்பதில்லை. குறிப்பாக கொங்கனப்பள்ளி கிராமத்தில் செல்போன் சிக்னல் முற்றிலும் கிடைக்கவில்லை என தெரிகிறது.

இந்த நிலையில் தற்போது கொங்கனப்பள்ளி- கே.கொத்தூர் இடையே மத்திய அரசு சார்பில் பி.எஸ்.என்.எல். செல்போன் கோபுரம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

இதுகுறித்து செல்போன் கோபுரம் அமைக்கும் பணியில் ஈடுபடுபவர்கள் கூறுகையில், சுமார் 130 அடி உயரத்தில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணி ஓரிரு மாதங்களில் நிறைவு பெற்றவுடன் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றனர். பல ஆண்டுகளாக கிராமத்தில் செல்போன் கோபுரம் இல்லமால் அவதிப்பட்டு வந்த நிலையில் தற்போது மத்திய அரசு செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை தொடங்கி உள்ளதால் தங்களுடையே நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறி இருப்பதாக கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Related Tags :
Next Story