வேளாண் கருவிகள் உற்பத்தியில் வட மாநில தொழிலாளர்கள்


வேளாண் கருவிகள் உற்பத்தியில் வட மாநில தொழிலாளர்கள்
x

திருவாடானை தாலுகாவில் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் குடும்பம் குடும்பமாக முகாமிட்டு வேளாண் கருவிகளை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகின்றனர்.

ராமநாதபுரம்

தொண்டி,

திருவாடானை தாலுகாவில் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் குடும்பம் குடும்பமாக முகாமிட்டு வேளாண் கருவிகளை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகின்றனர்.

வேளாண் கருவி

ஒவ்வொரு ஆண்டும் விவசாயம் நடைபெறும் கால கட்டங்களில் வெளி மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் இங்கு வந்து முகாமிட்டு வேளாண் கருவிகளை உற்பத்தி செய்து விற்பனை செய்வதை கடந்த சில வருடங்களாக வழக்கமாக செய்து வருகின்றனர்.

அதன் அடிப்படையில் இந்த ஆண்டும் திருவாடானை தாலுகாவில் உள்ள தொண்டி, எஸ்.பி.பட்டினம், வெள்ளைய புரம், பாண்டுகுடி, மங்கலக்குடி, திருவாடானை, சி.கே.மங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் முகாமிட்டு உள்ளனர். தற்போது தாலுகாவில் விவசாய பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனையொட்டி வட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வேளாண் கருவிகளை உடனுக்குடன் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகின்றனர்.

வேளாண் கருவிகளை உற்பத்தி செய்யும் பணியில் ஆண், பெண் இருபாலரும் ஈடுபட்டு வருகின்றனர். கருவிகளை உற்பத்தி செய்யும் முறைகளை விவசாயிகள் பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் பார்வையிடுவதுடன் அதனை வட மாநில தொழிலாளர்களிடம் பேரம் பேசி ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

இதுகுறித்து மத்திய பிரதேச மாநிலம் போபாலை சேர்ந்த தொழிலாளி சூரியா கூறியதாவது:- போபால் பகுதியை சேர்ந்தவர்கள் மட்டும் அல்லாமல் எங்கள் மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமானவர்கள் தமிழகத்திற்கு குடும்பம் குடும்பமாக வந்துள்ளோம். அங்கு போதிய வருமானம் இல்லாத நிலையில் இங்கு வேளாண் கருவிகளை உற்பத்தி செய்து விற்று குடும்பத்தை காப்பாற்றுவதற்காக வந்துள்ளோம்.

மிகுந்த ஆதரவு

பல நகரங்கள் மற்றும் கிராமங்கள் போன்ற இடங்களிலும் முகாமிட்டு இங்கேயே மூலப் பொருட்களை வாங்கி சம்பவ இடத்திலேயே உற்பத்தி செய்து கருவிகளை விற்பனை செய்கிறோம். தமிழகத்தில் உள்ள அனைவரும் எங்களது தாய், தந்தையர், சகோதரர்கள் போன்றவர்கள் எங்களுக்கு மிகுந்த ஆதரவு அளித்து வருகின்றனர். எங்களுக்கு கட்டுப்படி ஆகின்ற விலையில் குறைவான லாபத்துடன் கருவிகளை விற்பனை செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story