13,495 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்பள்ளிகளுக்கு அனுப்பும் பணி தீவிரம்


13,495 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்பள்ளிகளுக்கு அனுப்பும் பணி தீவிரம்
x

வேலூர் மாவட்டத்தில் 13,495 மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட உள்ளது. இதற்காக பள்ளிகளுக்கு சைக்கிள்கள் அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

வேலூர்


வேலூர் மாவட்டத்தில் 13,495 மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட உள்ளது. இதற்காக பள்ளிகளுக்கு சைக்கிள்கள் அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இலவச சைக்கிள்

தமிழகத்தில் ஏழை மாணவர்களின் நலனுக்காக பள்ளிக்கு எளிதில் சென்று வர இலவசமாக சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி அரசு பள்ளி, ஆதிதிராவிடர் நல பள்ளி மற்றும் அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் சைக்கிள் பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு பிளஸ்-1 வகுப்பு படித்த மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கப்படாமல் காலதாமதம் ஏற்பட்டது.

இதையடுத்து அவர்களுக்கு சைக்கிள் வழங்க அரசு உத்தரவிட்டது. அதன்பேரில் மாணவ -மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட உள்ளது.

மாணவர்கள் குறித்த பட்டியல் தயார் செய்யப்பட்டு, அவர்களுக்கு சைக்கிள் கொள்முதல் செய்யும் பணியும் நடந்தது. தற்போது அந்த சைக்கிள்கள் ஒவ்வொரு பள்ளிக்கும் லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விரைவில் வழங்கப்படும்

கடந்த ஆண்டு பிளஸ்-1 படித்த மாணவர்கள் தற்போது பிளஸ் -2 படித்து வருவதால் அவர்களுக்கு இந்த ஆண்டு இலவச சைக்கிள் வழங்கப்படுகிறது.

வேலூர் மாவட்டத்தில் தற்போது 84 மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 6,348 மாணவர்கள், 7,147 மாணவிகள் என மொத்தம் 13,495 பேருக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட உள்ளது.

பள்ளிகளுக்கு வரப்பெற்ற சைக்கிள்கள் தரமானதாக உள்ளதா? என கல்வித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். அனைத்து பள்ளிகளுக்கும் சைக்கிள்கள் வந்தவுடன் விரைவில் மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.



Next Story