கரூரில் கட்டப்பட்டு வரும் காமராஜ் மார்க்கெட் வணிக வளாக பணிகள் ஜூன் மாதம் முடிவடையும்: அமைச்சர் தகவல்


கரூரில் கட்டப்பட்டு வரும் காமராஜ் மார்க்கெட் வணிக வளாக பணிகள் ஜூன் மாதம் முடிவடையும்: அமைச்சர்  தகவல்
x
தினத்தந்தி 7 Jan 2023 12:10 AM IST (Updated: 7 Jan 2023 12:29 AM IST)
t-max-icont-min-icon

கரூரில் ரூ.6¾ ேகாடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் காமராஜ் மார்க்கெட் வணிக வளாக பணிகள் ஜூன் மாதம் முடிவடையும் என அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கூறினார். ஆய்வு

கரூர்

கரூர் காமராஜ் மார்க்கெட் பகுதியில் ரூ.6 கோடியே 75 லட்சம் மதிப்பில் புதிய வணிக வளாகம் கட்டப்பட்டு வருகிறது. அந்த பணிகளை நேற்று அமைச்சர் வி.செந்தில்பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டிளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கரூரில் புதிய காமராஜ் மார்க்கெட் வணிக வளாகம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. வருகிற ஜூன் மாதம் பணிகள் முழுவதும் முடிக்கப்பட்டு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். 174 கடைகள் கொண்ட வணிக வளாகமாக அமைக்கப்பட்டிருக்கின்றது. அதாவது தரைதளத்திற்கான பணிகள் முடிக்க இருக்கின்றன. முதல் தளத்திற்கான திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு வருகின்றது. தரைத்தள கடைகள் வணிக பெருமக்களுக்கு ஒதுக்கப்பட்டு அதற்குப் பிறகு முதல் தளம் நடைபெறுவதற்காக திட்டமிடல் இப்பொழுது நடைபெற்று கொண்டிருக்கின்றது.

மீன் மார்க்கெட்

அதேபோல் மீன் மார்க்கெட் அமைவதற்கான தனியாக ரூ.1 கோடியே 65 லட்சத்திற்கு டெண்டர் விடும் பணிகள் விடப்பட்டு அதற்கான பணிகளும் விரைவில் தொடங்க இருக்கின்றது. அதற்கான பணிகள் அடுத்தடுத்து எடுக்கப்பட்டு முன்னெடுப்பு செய்ய இருக்கின்றது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில், மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர், எம்.எல்.ஏ.க்கள். மாணிக்கம், சிவகாமசுந்தரி, இளங்ேகா, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் சரவணன், கரூர் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், மண்டல தலைவர்கள் ராஜா, சக்திவேல், அன்பரசன், கனகராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story