வடமாநில தொழிலாளர்கள் விவரத்தை பதிவு செய்ய வலியுறுத்தல்


வடமாநில தொழிலாளர்கள் விவரத்தை பதிவு செய்ய வலியுறுத்தல்
x

மீனவ பெண் கொலையை தொடர்ந்து புதுமடம் ஊராட்சியில் வடமாநில தொழிலாளர்கள் விவரத்தை பதிவு செய்யவேண்டும் என்று தலைவர் காமில் உசேன் அறிவித்துள்ளார்.

ராமநாதபுரம்

பனைக்குளம்,

மீனவ பெண் கொலையை தொடர்ந்து புதுமடம் ஊராட்சியில் வடமாநில தொழிலாளர்கள் விவரத்தை பதிவு செய்யவேண்டும் என்று தலைவர் காமில் உசேன் அறிவித்துள்ளார்.

மீனவ பெண் கொலை

ராமநாதபுரம் மாவட்டத்தில் வட நாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் அதிகமானவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் சொந்தமாக ஜவுளி வியாபாரம் செய்து வருபவர்களாகவும் ஐஸ் மற்றும் பாப்கான் உள்ளிட்ட பொருள்களை கிராமங்கள் தோறும் விற்பனை செய்து வருவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். மேலும் கட்டிட தொழிலாளர்களாகவும் உணவகங்களில் பணியாற்றக் கூடியவர்களாகவும் சில இடங்களில் காவலர் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் ராமேசுவரத்தில் மீனவப்பெண் கொலையை தொடர்ந்து மண்டபம் ஒன்றியம் புதுமடம் ஊராட்சி தலைவர் காமில் உசேன், ஊராட்சி மன்றத்தின் சார்பில் வெளிமாநிலங்களில் இருந்து புதுமடம் கிராமத்தில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வரக்கூடிய தொழிலாளர்களுக்கு அறிவிப்பு கொடுத்துள்ளார்.

விவரம்

அதில் புதுமடம் ஊராட்சிக்கு உட்பட்ட இடங்களில் குடியிருக்கும் வெளிமாநில நபர்கள் மற்றும் வெளிமாநில நபர்களை வைத்து வீடு கட்டும் வீட்டின் உரிமையாளர்கள், கட்டிட பொறியாளர்கள், கட்டிட ஒப்பந்ததாரர்கள் மூலமாக வேலை பார்த்து வரக்கூடிய நபர்களின் விவரங்களை தெரிவித்து ஊராட்சி அலுவலகத்தில் ஆதார் நகல் புகைப் படம் மற்றும் அவர்களது கைபேசி நம்பர் உள்ளிட்ட வைகளை வழங்கி பதிவு செய்யவேண்டும்.

புகார்

அவ்வாறு பதிவு செய்யாதவர்கள் கிராமத்தில் இருந்து பணியாற்ற அனுமதி கிடையாது என அறிவித்துள்ளார். மேலும் இரவு நேரங்களில் வெளி மாநிலத்தவர் நடமாட்டங்கள் இருந்தால் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் செய்யவும் கேட்டுக்கொண்டுள்ளார்.


Next Story