வாலிபரை தாக்கிய தொழிலாளி கைது
வாலிபரை தாக்கிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
கடலூர்
கடலூர் ஆல்பேட்டையை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 35). இவரும், ஆல்பேட்டை கன்னிக்கோவில் தெருவை சேர்ந்த தொழிலாளி சரவணன் (39) என்பவரும் நண்பர்கள். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு விஜயகுமார், சரவணனிடம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்த பணத்தை பலமுறை கேட்டும் சரவணன், திருப்பி கொடுக்கவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று விஜயகுமார், தான் கொடுத்த பணத்தை தருமாறு கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சரவணன், தனது ஆதரவாளர்கள் மகேந்திரன், மதன் ஆகியோருடன் சேர்ந்து விஜயகுமாரை ஆபாசமாக திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்தனர். மேலும் மகேந்திரன், மதன் ஆகியோரை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story