தொழிலாளி போக்சோவில் கைது
கோவை அருகே 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளியை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
அன்னூர்
கோவை அருகே 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளியை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
தொழிலாளி
திருப்பூர் மாவட்டம் பொங்கலூரை சேர்ந்தவர் ராஜேஸ் என்கிற காந்தி (வயது 26). கூலி தொழிலாளி. இவர் வேலை காரணமாக அடிக்கடி அன்னூர் பகுதிக்கு சென்று வருவது வழக்கம். அப்போது அன்னூர் பகுதியை சேர்ந்த 9-ம் படித்து வரும் 14 வயது சிறுமியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது.
இந்த நிலையில் ராஜேஸ் என்கிற காந்தி கடந்த 2 வாரங்களுக்கு முன் சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றார்.
போக்சோவில் கைது
இந்த நிலையில் சிறுமி மாயமானது குறித்து அவரின் பெற்றோர் அன்னூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர். இதனிடையே சிறுமி கேரள மாநிலத்தில் இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று அந்த சிறுமியை மீட்டனர்.
பின்னர் சிறுமியிடம் நடத்திய விசாரணையில், ராஜேஸ் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த ராஜேஸ் என்கிற காந்தியை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.