தொழிலாளி போக்சோவில் கைது
பொள்ளாச்சி அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தொழிலாளியை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தொழிலாளியை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
சிறுமி காணவில்லை
பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் தொழிலாளி. இவர் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வசித்து வருகிறார். இந்த அந்த தொழிலாளி தனது 14 வயது மகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் சிறுமியின் தந்தை மற்றும் பாட்டி சாப்பிட்டு தூங்கியதாக தெரிகிறது.
சிறுமி மட்டும் டி.வி. பார்த்து கொண்டிருந்ததார். இரவு திடீரென்று விழித்து பார்த்த போது சிறுமியை காணவில்லை. அக்கம், பக்கத்தில் தேடி பார்த்தும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் பொள்ளாச்சி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
போக்சோ கைது
இதற்கிடையில் மீனாட்சிபுரத்தில் சிறுமியுடன் நின்ற நபரை போலீசார் பிடித்து சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மண்ணூரை சேர்ந்த தொழிலாளியான காளி (வயது 47) என்பதும், அவர் சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதற்கிடையில் கைதான காளி ஏற்கனவே 3 பெண்களை திருமணம் செய்து உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.