தொழிலாளியை தாக்கி வீடியோ பதிவு செய்த விவகாரம்:3 வாலிபர்கள் கைது
தொழிலாளியை தாக்கி வீடியோ பதிவு செய்த விவகாரம் தொடர்பாக 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
தர்மபுரி
நல்லம்பள்ளி:
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 45), கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று நல்லம்பள்ளி பகுதியில் 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று அவரை தாக்கி, வீடியோ பதிவு செய்து, சமூக வலைதளங்களில் வைரலாக பதிவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி, பாதிக்கப்பட்ட கூலி தொழிலாளி பெருமாள் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதையடுத்து சம்பவம் தொடர்பாக நல்லம்பள்ளி ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி (22), ஆதிகேசவன் (23), அபிஷேக் (21) ஆகிய 3 பேரையும் கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் தலைமறைவாகி உள்ள 17 வயது சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story