கொடைக்கானலில் கட்டிட பணியின் போது மண்சரிவில் சிக்கிய தொழிலாளி - பத்திரமாக மீட்ட பொதுமக்கள்


கொடைக்கானலில் கட்டிட பணியின் போது மண்சரிவில் சிக்கிய தொழிலாளி - பத்திரமாக மீட்ட பொதுமக்கள்
x

மண்சரிவில் சிக்கிய மாரிமுத்துவை சுமார் 1 மணி நேர போராட்டத்திற்குப் பின் பொதுமக்கள் பத்திரமாக மீட்டனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே வில்பட்டி பிரதான சாலையில், வீட்டு மனைகள் கட்டுவதற்கான கட்டிட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் கட்டித்திற்கான பில்லர் தோண்டும் பணியில் 2 கட்டிட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த போது, திடீரென மண்சரிவு ஏற்பட்டது.

இந்த மண்சரிவில் மாரிமுத்து என்ற தொழிலாளி சிக்கிக் கொன்டார். அவருடன் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஜெயபாண்டி என்பவர், மாரிமுத்துவை மீட்க முயன்றுள்ளார். அவரது முயற்சி பலனளிக்காததால், அருகில் இருந்த பொதுமக்களை உதவிக்கு அழைத்துள்ளார்.

இதையத்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் விரைந்து வந்து, மண்சரிவில் சிக்கிய மாரிமுத்துவை சுமார் 1 மணி நேர போராட்டத்திற்குப் பின் பத்திரமாக மீட்டனர். மண் தளர்வாக இருந்ததால், மீட்கும் போது மீண்டும் மண்சரிவு ஏற்படத் தொடங்கியது. இதனால் மீட்புப் பணி சற்று கடினமாக இருந்தது. இருப்பினும் தொடர் முயற்சியால் மாரிமுத்துவை மீட்டு, அவரை முதலுதவி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story