விஷம் தின்று தொழிலாளி தற்கொலை


விஷம் தின்று தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 28 March 2023 12:15 AM IST (Updated: 28 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை அருகே விஷம் தின்று தொழிலாளி தற்கொலை செய்து கொண்டனர்

மயிலாடுதுறை

மயிலாடுதுறை அருகே ஆனதாண்டபுரம் பெரிய குளத்தங்கரை தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர். இவருடைய மகன் ஜெகநாதன் (வயது 33). விவசாய கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகவில்லை. இவர் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். சம்பவத்தன்று வயிற்று வலி அதிகமானதால் மனமுடைந்த ஜெகநாதன் எலி மருந்தை(விஷம்) தின்று மயங்கி விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெகநாதன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story