விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
தக்கலை அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
தக்கலை,
தக்கலை அருகே உள்ள காரவிளை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (வயது 51), தொழிலாளி. இவருக்கு சந்திரிகா(47) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சந்திரகுமாருக்கு சாலை விபத்தில் காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் நடக்க முடியாத காரணத்தால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். தான் ேவலைக்கு செல்ல முடியாததாலும், பிள்ளைகளின் படிப்பு, குடும்ப செலவுகள் நினைத்து கடந்த சில நாட்களாக ரமேஷ்குமார் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார்.
இந்தநிலையில் நேற்று காலையில் தக்கலை அருகே குமாரகோவில் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் விஷம் குடித்து இறந்து கிடந்தார். இதைகண்ட அந்த வழியாக சென்றவர்கள் தக்கலை போலீசாருக்கு தெரிவித்தனர். அதன்பேரில் ேபாலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரமேஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.