தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
குடும்ப தகராறில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கோத்தகிரி
கோத்தகிரி அருகே கொணவக்கரை முல்லை நகரை சேர்ந்த சவுரிமுத்து என்பவரது மகன் ஜான் வின்சென்ட் (வயது 36). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி வசந்தி. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். ஜான் வின்சென்ட்டுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாகவும், இதனால் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் ஜான் வின்சென்ட் வீட்டிற்கு வந்தார். பின்னர் மனைவியுடன் தகராறு செய்து விட்டு, அறைக்குள் சென்று தூக்கு போட்டு உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த வசந்தி அக்கம் பக்கத்தினர் உதவியுடன், கணவரை மீட்டு சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஜான் வின்சென்ட் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வசந்தி கோத்தகிரி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.