தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அருமனை அருகே உள்ள சிதறால் வெள்ளாங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ்(வயது 32), எலக்ட்ரீசியன். இவருக்கு சோனியா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். சில ஆண்டுகள் வெளிநாட்டில் வேலை செய்து வந்த மனோஜ், அதன்பிறகு சொந்த ஊரில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தார். மேலும், மனோஜூக்கு கடன் தொல்லை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், கடந்த சில நாட்களாக அவர் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மனோஜ் தனது பழைய வீட்டின் ஒரு பகுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக்கண்ட அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அருமனை போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று மனோஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.