தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 14 Oct 2023 12:15 AM IST (Updated: 14 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கருவேப்பிலங்குறிச்சி அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடலூர்

கருவேப்பிலங்குறிச்சி

கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள சி.கீரனூர் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் மகன் சரண்ராஜ் (வயது 26). கூலி தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் மனைவிக்கு குழந்தை பிறக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த சரண்ராஜ் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டின் பின்புறம் உள்ள ஒரு வேப்பமரத்தில் மனைவியின் துப்பட்டாவால் தூக்குப்போட்டுக் கொண்டார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சரண்ராஜை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், சரண்ராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து சரண்ராஜியின் தந்தை சண்முகம் கொடுத்த புகாரின் பேரில் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story