தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
தக்கலை அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
தக்கலை:
தக்கலை அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
தக்கலை அருகே உள்ள அடப்புவிளை பகுதியை சேர்ந்தவர் ஷேக் முகமது (வயது 45). இவர் தக்கலையில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி சஜினா (39). இவர்களுக்கு 10-ம் வகுப்பு படிக்கும் ஒரு மகனும், 7-ம் வகுப்பு படிக்கும் ஒரு மகளும் இருந்தனர்.
இந்தநிலையில் அவரால் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் வீட்டிலேயே முடங்கி கிடந்தார். ஷேக் முகமது வேலைக்கு செல்ல முடியாததால் குடும்ப செலவை சமாளிப்பதற்கு அவரது மனைவி வீட்டு வேலைக்கு சென்றார்.
வேலைக்கு செல்ல முடியாததால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ஷேக்முகமது நேற்று காலையில் வீட்டின் மாடியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பின்னர் ஷேக் முகமதுவின் உடலை தக்கலை போலீசார்கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.