தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
முனைஞ்சிப்பட்டி அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருநெல்வேலி
இட்டமொழி:
முனைஞ்சிப்பட்டி அருகே உள்ள கழுவூர் காலனியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது 30), தொழிலாளி. இவரது மனைவி சாந்தி. தமிழ்ச்செல்வனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் கோபித்துக்கொண்டு கடந்த 26-ந் தேதி சாந்தி தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் மனவேதனை அடைந்த தமிழ்ச்செல்வன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த வடக்கு விஜயநாராயணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாககுமாரி மற்றும் போலீசார் விரைந்து சென்று, அவரது உடலை கைப்பற்றி பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story