தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 27 Feb 2023 12:15 AM IST (Updated: 27 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நெகமம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கோயம்புத்தூர்

நெகமம்,

நெகமம் அடுத்த என்.சந்திராபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 50). கூலித்தொழிலாளி. இவரது மனைவி மாரியம்மாள் (33). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இதற்கிடையே ராஜேந்திரனுக்கு மதுக்குடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்து உள்ளார். மேலும் வீட்டு செலவுக்கு பணம் கொடுக்காமல் இருந்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டிற்கு சமையல் கியாஸ் சிலிண்டர் எடுத்து வருமாறு மாரியம்மாள் தனது கணவரிடம் கூறி பணத்தை கொடுத்தார். தொடர்ந்து ராஜேந்திரன் சிலிண்டர் எடுத்துக்கொண்ட பின்னர், மீதமுள்ள பணத்தை மது குடிக்க பயன்படுத்தியதாக தெரிகிறது. இதனால் மனைவி, கணவன் இடையே தகராறு ஏற்பட்டது.

பின்னர் வீட்டில் இருந்த ராஜேந்திரன் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்த நெகமம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story