தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
கடன் தொல்லையால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
கன்னியாகுமரி
மேலகிருஷ்ணன்புதூர்,
புத்தளம் அருகே உள்ள அரியப்பெருமாள் விளையை சேர்ந்தவர் சிவகுமார் (வயது29), கட்டிட தொழிலாளி. இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். சிவகுமார் புதியதாக வீடு கட்டியதால் அதிக கடன் ஏற்பட்டதாக தெரிகிறது. கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த அவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் படுக்கை அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சுசீந்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இது தொடர்பாக சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story