தொழிலாளி கழுத்தை அறுத்து தற்கொலை


தொழிலாளி கழுத்தை அறுத்து தற்கொலை
x

வெம்பாக்கம் அருகே மதுகுடிக்க மனைவி பணம் தராததால் தொழிலாளி கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.

திருவண்ணாமலை

தூசி

வெம்பாக்கம் அருகே மதுகுடிக்க மனைவி பணம் தராததால் தொழிலாளி கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.

மதுகுடிக்க பணம் தராததால் தகராறு

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா சோழவரம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 35), கூலித்தொழிலாளி.

இவரது மனைவி சாவித்திரி. இவர் செய்யாறு சிப்காட் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார்.

இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். குடிப்பழக்கத்துக்கு அடிமையான விஜயகுமார் தினமும் குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்துவந்ததாக கூறப்படுகிறது.

வழக்கம்போல நேற்று மாலை, மது குடிக்க மனைவி சாவித்திரியிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் சாவித்திரி பணம் கொடுக்கவில்லை. இதனால் அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

கழுத்தை அறுத்து தற்கொலை

அப்போது விஜயகுமார் பணம் தராவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டி உள்ளார்.

அதேபோல் சிறிது நேரத்தில் துணி துவைக்க வைத்திருந்த ரசாயனத்தை குடித்துவிட்டு, கத்தியால் தனது கழுத்தை அறுத்துக்கொண்டதாகக்கூறப்படுகிறது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சாவித்திரி மற்றும் குடும்பத்தினர் விஜயகுமாரை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், விஜயகுமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையெடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் தூசி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story